கிராமப்புற இளைஞர்களுக்கு அசத்தல் வேலைவாய்ப்பு கொடுக்கும் SKPSR திறன் மையம்!

கோவை: கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில், மகாலட்சுமி–முத்துராமலிங்கம் அறக்கட்டளை மற்றும் கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் தொழிற்கல்வி மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.

Advertisement

இந்தியாவில் பட்டதாரி இளைஞர்கள் சுமார் 15 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.

முறையான தொழிற்பயிற்சி இல்லாமல் இருப்பதால் இவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, மருத்துவர் ராஜேந்திர பிரசாத்தின் மகாலட்சுமி–முத்துராமலிங்கம் அறக்கட்டளை, கோவை விஜிஎம் மருத்துவமனை இணைந்து உடுமலையில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவிபெறும் பள்ளியில் தொழிற்கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் படிக்கலாம்: கெட்டுப்போன சிக்கனில் கோவை லுலு மால் ஆஃபர்! – அதிர்ச்சி வீடியோ

இந்த மையம் மூலம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்கள் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு தொழிற்கல்வி வழங்கி, அவர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது. எஸ்.கே.பி. சுனந்தா ராம்மோகன் திறன் மையம் (SKPSR திறன் மையம்) என்று பெயரிடப்பட்ட இந்த மையத்தில் இணைய 18 முதல் 27 வயதுக்குள் உள்ள, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில், மருத்துவர் ராஜேந்திர பிரசாத் மற்றும் விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் வி.ஜி. மோகன் பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-

Rural youth skill training center launch

இளைஞர்களை திறன் வாய்ந்தவர்களாக உருவாக்கும் உயரிய நோக்கில் இந்த மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் முதல் பேட்சில் பயிற்சி பெற்ற 11 மாணவர்கள் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். குறிப்பிட்ட ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்ட துறைக்கு பணியாளர்களை தேடுகையில், நாங்கள் அதற்கேற்ப பயிற்சிகளைக் கொடுத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

SKPSR திறன் மையம், மற்ற 30 திறன் மையங்களுடன் இணைந்து, வருங்காலத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பயிற்சிகளை வழங்க உள்ளது. எங்களுடன் பொள்ளாச்சி ஐ.டி. நிபுணர் ராமலிங்கம், வினோத், பாலா மற்றும் கௌதம் ஆகியோர் பயிற்சி மற்றும் செயல்பாட்டு பணிகளில் முக்கிய பங்காற்றி தன்னலமற்ற சேவை புரிகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த மையம் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 9841027688

READ NEWS: அதிமுகவை அழிக்கும் முடிவில் பாஜக வெற்றி பெற்றது – கோவையில் புகழேந்தி விமர்சனம்…

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…

கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...