தேர்தல் நடத்தை விதிகள்- திருமண மண்டபங்கள், அச்சகங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்த ஆட்சியர்…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் அச்சகங்கள் சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் பிளக்ஸ் அச்சகங்கள் ஆகிய சங்கத்தினர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், துணை இயக்குநர் (கலால்) முருகேசன் திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்கள் அச்சகத்தினர் சங்கங்கள், பேனர் பிளக்ஸ் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது, சட்டமன்ற பொது தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள் தங்கள் அச்சடிக்கும் நோட்டீஸ் பேனர்களில் தங்களது அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி அச்சிட வேண்டும்.

Advertisement

வேட்பாளர் விளம்பரத்திற்கு அரசிடம் முன் அனுமதி பெற்றுள்ளாரா என்பதனை உறுதி செய்ய வேண்டும். திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபத்தை பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்கிட பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது. மேலும், வேட்பாளர்கள் மண்டபத்திற்கு செலுத்திய வாடகை தொகை விவரத்தை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்யக்கூடாது என தெரிவித்தார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…

கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...