குறைதீர்ப்பு முகாம் நடத்திய கோவை மாவட்ட போலீசார்!

கோவை: கோவை மாவட்ட போலீசார் இன்று நடத்திய குறைதீர்ப்பு முகாமில் 73 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறு விசாரணை நடத்தும் விதமாக கோவையில் இன்று மாவட்ட போலீசார் நடத்திய மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது,.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 73 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் (FIR), ஒரு மனு மீது மனு ரசீதும் (CSR) பதிவு செய்யப்பட்டது.

மேலும், 66 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 2 மனுக்கள் மீது மே‌ல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்குத் தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.