கோவை: கோவையில் வெறி நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் மதிகிஷோர் (15 வயது). இந்த சிறுவனை வெறிநாய் கடித்து உள்ளது. இதனால் அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அந்த சிறுவனுக்கு கடந்த ஒன்பதாம் தேதி திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது.
இதை அடுத்து அவரது பெற்றோர் சிறுவனை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனுக்கு நாய்க் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைக் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதை அடுத்து அந்த சிறுவனை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கடந்த 10ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.
மக்களே, நாய் கீறல் கூட உயிரைக் கொல்லும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்
ரேபிஸ் பாதிப்பு குறித்து மருத்துவரின் விழிப்புணர்வு வீடியோ பதிவு இதோ…




