காவல் உதவி ஆய்வாளர் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

கோவை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 1299 காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கான தேர்வு வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகளுக்கு இலவச மாதிரித்தேர்வுகள் கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் அக்., 15, 22, 29, நவ., 5, 12, 19, 26 மற்றும் டிச., 3, 10, 17 ஆகிய தேதிகளில் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாதிரித்தேர்வு முடிந்த அன்றே தேர்வுக்கான விடை குறிப்புகள் மற்றும் மதிப்பெண் விவரங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் 04222642388 / 9499055937 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Recent News

கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. கோவை அண்ணா சிலை அருகே உள்ள...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp