கோவை: மருதமலை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த கருஞ்சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
கோவை மருதமலை அடிவாரம் அருகே லெப்ரஸி காலனி எனும் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை குட்டி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்த நிலையில் அதனை வனத்துறையினர் மீட்டு தாய் சிறுத்தையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் லெப்ரஸி காலனியில் இன்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று அதன் குட்டியுடன் சுற்றி திரிந்த நிலையில் அதன், குட்டியை யாரும் இல்லாத வீட்டில் குட்டியை விட்டு விட்டு தாய் சிறுத்தை சென்றுள்ளது.
இந்நிலையில் சிறுத்தை குட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை அடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் குட்டியை பத்திரமாக மீட்டு கூண்டில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அந்த குட்டியை தாய் சிறுத்தையுடன் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

