கோவை: கோவையில் காதலித்த பெண்ணை கொன்றுவிட்டு நாடகமாடிய குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை கோயில்மேடு பகுதியை சார்ந்தவர் ருக்ஷனா. இவரை காணவில்லை என்று சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் குடும்பத்தார் புகார் தந்தனர். பெண் மாயமானதாக வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, மேட்டுப்பாளையம் பகுதியில் ருக்ஷனா சடலம் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அப்போது, ருக்ஷனா கொலை செய்யப்பட்டதனை போலீசார் அறிந்தனர். கொலை வழக்காக மாற்றபட்டு விசாரணை நடத்தியதியதில் , அப்பெண்ணை காதலித்து வந்த வாலிபர் பிரசாந்த் கொன்றது தெரியவந்தது.
பிரசாந்த் ருக்ஷனாவை காதலித்து வந்தது உள்ளார். அது பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவந்ததை அடுத்து குடும்பத்தார் வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனை அறிந்த பிரசாந்த், அப்பெண்ணை மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கின்றார். அதற்கு உடன்பட்டு வராத நிலையில், ருக்ஷனாவை பாறையில் இருந்து தள்ளிவிட்டு, தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். பின்னர் அப்பெண்ணின் சடலத்தை ஏதோ கும்பல் கொன்றதை போல போலீசார் நம்பும் வகையில் தடையங்களை மறைத்துள்ளார்.
காதலித்த பெண் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்ய மறுத்தனால், ருக்ஷனாவை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக S. மோகன் பிரபு ஆஜரானார்.
காவல்துறை சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்து வாதம் மற்றும் பிரதிவாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சிவகுமார், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் ஐ.பி.சி. 302, ஐ.பி.சி. 364 உள்ளிட்ட சட்டப் பிரிவுகளுக்கு தலா ஒரு ஆயுள் சிறை என இரண்டு ஆயுள் தண்டனையும், ஐ.பி.சி. 201 சட்ட பிரிவுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.