கோவை: கோவையில் பேருந்துக்காக காத்த்திருவருக்கு அடி, உதை விழுந்த விவகாரம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் சுகுணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (54). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக காந்திபுரம் வந்தார்.
பின்னர் சிங்காநல்லூர் செல்ல காந்திபுரம் சிக்னல் அருகே பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் பாலசுப்பிரமணியன் மீது மோதினர்.
இதனால் கோபமடைந்த பாலசுப்பிரமணியன் இருவரையும் கண்டித்தார். அப்போது குடிபோதையில் இருந்த பைக் ஆசாமிகள் இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி பாலசுப்பிரமணியனை அடித்து உதைத்தனர்.
மேலும், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை தாக்கி விட்டு தப்பி சென்ற குடிபோதை ஆசாமிகள் இருவரை தேடி வருகின்றனர்.