Header Top Ad
Header Top Ad

கோவையில் அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி- துவங்கும் தேதி அறிவிப்பு…

கோவை: அக்ரி இன்டெக்ஸ் 2025 எனும் வேளாண் கண்காட்சி வரும் ஜூலை 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது

கோவை கொடிசியா தொழில் கூட்டமைப்பு சார்பில் அக்ரி இன்டெக்ஸ் 2025 எனும் வேளாண் கண்காட்சியின் 23-வது பதிப்பு வரும் ஜூலை 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியின் போஸ்டர் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், அக்ரி இண்டெக்ஸ் தலைவர் ஸ்ரீஹரி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய அக்ரி இன்டெக்ஸ் தலைவர் ஸ்ரீஹரி பேசுகையில்

Advertisement

இந்த அக்ரி இன்டெக்ஸ் 2025 வேளாண் கண்காட்சி 23-வது பதிப்பு நடத்தி வருவதாகவும் இந்த ஆண்டு மொத்தம் 7 அரங்கில் கோழி வளர்ப்பு, சோலார் வளாகம் மற்றும் நாற்றுப் பண்ணை மற்றும் விலங்குகளுக்கான வெளிப்புற வளாகம் அமைக்கப்பட உள்ளனர்.உலகளவில் இருந்து 5 நாடுகளில் இருந்து விவசாயம் சார்ந்து இயந்திரங்கள் காட்சிப்படுத்த உள்ளனர்.

மேலும் இந்தியாவில் இருந்து டெல்லி, ஹரியானா,டெல்லி,கேரளா,ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கண்காட்சிக்கு பார்வை நேரம் ஆனது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை என்றும் ஐம்பது ரூபாய் பொதுப்பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கபடும் அதேபோல விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசம் என தெரிவித்தனர். கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் கோழி வளர்ப்பு தொழில்,விவசாயிகளுக்கு அதிக லாபம் அளிக்கக்கூடிய தொழில் வாய்ப்பு,புதிய தொழில் தொடங்க முனைவோருக்கு வாய்ப்பாக உள்ளது.இந்த கண்காட்சியில் நாட்டு பசுக்களும், காளைகளும் காட்சிப்படுத்தப்படும்.

அதேபோல வேளாண் சூழலியல், கால்நடை வளர்ப்பு,மீன் வளர்ப்பு,உயிரி தொழில்நுட்பம்,தேங்காய் நார் கயிறு மற்றும் வாசனைப் பொருள்,மலர் வளர்ப்பு,பசுமை குடில் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை காட்சிக்கு வைக்க உள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இந்தியாவில் இருந்து வேளாண் மற்றும் உழவு நலத்துறை,சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம்,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவுடன் நடைபெறுகிறது.

Recent News