கோவை: AI தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாது என்றும் அதே சமயம் அதை நிலையானது அல்ல என்றும் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025” என்ற புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் 6 – ம் வகுப்பு முதல் முதல் 12 – ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் சிந்தனை திறன், புதிய படைப்பாற்றல் திறமைகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் தனித்துவமான படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இதனை இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி துவக்கி வைத்து பார்வையிட்டார் மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு துறையில் நாம் மிகவும் வலுவாக உள்ளோம். ககன்யான் மிகப்பெரிய சாதனையாக இருக்கும், அதற்கு இன்னும் சில காலம் தான் உள்ளது.அது கடந்து வந்த பாதையில் தொழிற்ப ரீதியாகவும் அரசியல் சார்ந்தும் பல சிக்கல்கள் இருந்தன 2028 ஆம் ஆண்டுக்குள் சாத்தியம் என நம்புகிறேன் என்றார்.
வானிலை முன்னறிவிப்புகளில் போதுமான அளவு சரியாக கணிக்கிறோம் என நம்புகிறேன் என்றும் பல்வேறு நிகழ் தகவுகள் இருக்கும் அதே சமயம் uncertainty என்பதும் இருக்கும் என்றார்.
Surgical strike நடக்கவே இல்லை என சிலர் கூறுவார்கள் ஆனால் அதில் பணியாற்றிவர்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். தனிநபர் பாதுகாப்பு என்பது உளவுத்துறை சார்ந்தது செயற்கைக்கோள் சார்ந்தது அல்ல என்றார்.
மாணவர்கள் பிடித்ததை படிக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் கூறுகிறார்கள் என்பதை படிக்க கூடாது அனைவரும் இன்ஜினியர் மருத்துவர் ஆக முடியாது,
பொறியியல் படித்து முடித்துவிட்டு சுங்கச்சாவடியில் சீட்டு கிழிக்கும் பணிகளும் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
அரசு பள்ளி மாணவர்கள் என்று இல்லை திறமையான மாணவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இப்போது இருக்கக்கூடிய அறிவியல் கற்றல் போதுமான அளவு இருக்கிறது என நம்புகிறேன். புதிய கல்வி கொள்கை போன்ற விஷயங்களுக்கும் நான் செல்ல விரும்பவில்லை,
AI வளர்ச்சி என்பதற்கு நாம் adapt ஆக தான் வேண்டும், தவிர்க்க முடியாது என்ற அவர் அதேசமயம் அது நிலையானது அல்ல வேறு ஒன்றும் வரலாம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பார்க் குழுமங்களின் தலைவர் ரவி மற்றும் முதன்மை செயல் அதிகாரி அனுசியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



