கோவை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை குறிவைத்து கோவையில் அதிமுக., நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
முன்னதாக, ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும், அதற்கு 10 நாட்கள் அவகாசம் தருவதாகவும் செங்கோட்டையன் பேசியிருந்தார். இதையடுத்து அவரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
அவருக்கு ஆதரவாக இருந்த எம்பி சத்யபாமாவும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதனிடையே, செங்கோட்டையன் தனது உடல்நலக் குறைவு காரணமாக ஹரித்வார் ஆன்மிகப் பயணம் செல்கிறேன் எனச் செய்தியாளர்களிடம் கூறியபோதும், பின்னர் டில்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது பெரும் பேசுபொருளாகியது.
இது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்நிலையில் இன்று இபிஎஸ் கோவை வருகையை முன்னிட்டு, அதிமுக நிர்வாகிகள் கோவையில் செங்கோட்டையனை தாக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில் “ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதாம்” போன்ற வசனங்களுடன், இபிஎஸ், எஸ்பி வேலுமணி, அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் அமைச்சரை சொந்த கட்சியினரை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.