டெபாசிட்க்கு அலைய வேண்டிய சூழல் அதிமுகவிற்கு ஏற்படும்- கோவையில் புகழேந்தி பேட்டி…

கோவை: 2026 தேர்தல் திமுகவிற்கும் தவெக விற்கும் தான் என்றும் அதிமுக டெபாசிட்டுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் SIR முழுவதுமாக களையப்பட வேண்டும் என்றும் இதனால் மிகப்பெரிய பாதகம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

SIRயில் பல்வேறு விவரங்களை நிரப்ப முடியாமல் மக்கள் சிரமப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் பாமர மக்கள் எவ்வாறு அந்த படிவங்களை பூர்த்தி செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இதற்கு ஒரு தீர்வே இல்லாது சூழல் நிலவி வருவதாகவும் ஆசிரியர்களை எல்லாம் இந்த பணியில் சேர்த்து அலைய விடுகிறார்கள் என தெரிவித்தார்.

ஆதார் கார்டை பல்வேறு ஆவணங்களுடன் இணைத்ததை சுட்டிக்காட்டிய அவர் தற்பொழுது அந்த சிஸ்டம் என்ன ஆனது? ஒவ்வொரு மனிதருக்கும் தனி நம்பர் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த நம்பரை போட்டால் அந்த நபரின் அனைத்து விவரங்களும் வரவேண்டும் அந்த நம்பரை கொண்டு வேறு ஒருவர் வாக்களிக்கக்கூடாது போன்ற ஒரு சிஸ்டம் வர வேண்டும் என குறிப்பிட்டார்.

SIR யை எதிர்த்து பல்வேறு கட்சிகள் போராடிக் கொண்டிருக்கிறது இது போன்ற தேர்தலை நடத்துவது முறையாக இருக்காது ஜனநாயகமாக இருக்காது என்று கூறினார். SIR க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளது குறித்தான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார் திண்டுக்கல் சீனிவாசன் இதன் மூலமாகத்தான் பீகாரில் ஜெயித்தார்கள் என்று கூறுகிறார் ஆனால் இந்த நடைமுறை சரி இல்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறுகிறார் என்றும் இந்த சிஸ்டம் சரியில்லை என்று சிவி சண்முகம் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அவர் உள்ளே விடப்படாமல் அவமானப்பட்டதாக தெரிவித்தார். மேலும் SIR பற்றி எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றும் தெரியாது என்றும் விமர்சித்தார்.

அனைத்து கட்சியினரும் சேர்ந்து மோடியிடம் இந்த திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தலாம் என தெரிவித்த அவர் ஆனால் அதனை செய்வதற்கு யாரும் முன் வருவதில்லை என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு 60 பெயர் சொல்லக் கூடிய முக்கியமான நபர்கள் அதிமுகவிலிருந்து விலகிச் சென்றுள்ளார்கள் என்றும் ஆனால் அவர்களது பெயரை கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கியது தொடர்பான கேள்விக்கு செங்கோட்டையன் அவரே தலைமை தாங்கி யாரையும் நம்பாமல் சென்றால் நன்றாக இருக்கும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை நம்பி சென்றால் ஆபத்தில் முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் இனிமேல் சேர்வது என்பது கிடையாது என்றும் கூறினார்.

வரக்கூடிய தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது டெபாசிட்டிற்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறிய அவர் தேர்தலில் திமுக விற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் போட்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவே மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்தான கேள்விக்கு ஒருங்கிணைப்பு குழுவெல்லாம் வைத்துப் பார்த்து விட்டோம் என்றும் ஆனால் வெற்றி பெற முடியவில்லை யாருக்கும் உள் மனதில் இருந்து சேர வேண்டும் என்ற அக்கறை இல்லை எனவே செங்கோட்டையனை பொறுத்தவரை திடமான முடிவு எடுப்பாரே ஆனால் அவரே தலைமை தாங்கி நடத்தினால் நடத்த முடியும் என தெரிவித்தார்.

பலரும் பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து வருவதை குறிப்பிட்ட அவர் விஜய் தற்போது வரை அது போன்று ஒரு முடிவை எடுக்கவில்லை அவ்வாறு எடுத்தால் மோசமாய் போய்விடும் என தெரிவித்தார்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காத்து வளர்த்த அதிமுக என்ற ஒரு கட்சி காணாமல் போவதற்கு இவர்கள் எல்லாம் காரணமாகி விடுவார்கள் எனவும் கூறினார்.மேலும் ஒரு மாதத்திற்கு பல மாறுதல்கள் இங்கே வரும் என்றும் காத்திருங்கள் என்றும் தெரிவித்தார்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்தான கேள்விக்கு அது தான் முழுவதுமாக டெபாசிட் போவதற்கு காரணமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் விஜய் வெளியில் வரவேண்டும் எனவும் மற்றவர்களுடன் பழக வேண்டும் என்றும் கரூரில் இறந்து போனவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்த அவர் வெளியில் வந்தால் தான் அரசியல் செய்ய முடியும் விஜய்யிடம் எழுச்சியான இளைஞர்களை காண முடிகிறது அதனை அவர்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் சொகுசு காரில் பிடிபட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- தேர்தல் பறக்கும் படை அதிரடி…

கோவை: கோவையில் சொகுசு காரில் இருந்த வெளிநாட்டு மதுபானங்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ​தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...