கோவை: கோவை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
நேற்று மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல், மிதமான மழை பதிவானது.
இதனிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.




