வாழை விவசாயிகளுக்கு ஓர் அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வாழைக்கான விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விவசாயத்தில் வாழை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன் சத்துக்கள் நிறைந்த தன்மை. ஆண்டு முழுவதும் கிடைக்கும் தன்மை மற்றும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது. உலக அளவில் வாழை உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தியா, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலைப்புத்தன்மைக்கு இப்பயிரைப் பெரிதும் சார்ந்துள்ளது.

Advertisement

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான இறுதி மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 9.02 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டு, ஹெக்டேருக்கு 49,486 கிலோ உற்பத்தித் திறனுடன் மொத்தம் 383 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியவை முக்கிய வாழை உற்பத்தி மாநிலங்களாக திகழ்வதுடன், ஒட்டுமொத்த உற்பத்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

தமிழகத்தில் வாழை ஒரு முக்கிய தோட்டக்கலை பயிராகும். இது விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் மதிப்புக்கூட்டு சங்கிலிகளை ஆதரிப்பதோடு, முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன், மொந்தன், ரஸ்தாளி, சலக்கி, நாடன். செவ்வாழை மற்றும் கிராண்ட் நெய்ன் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் தமிழகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன. ஈரோடு, தேனிதூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவை முக்கிய வாழை உற்பத்தி மாவட்டங்களாகும்.

கடந்த 2024-25 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1.14 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டு, 45 லட்சம் டன் உற்பத்தியும். ஹெக்டேருக்கு 39,691 கிலோ உற்பத்தித் திறனும் எட்டப்பட்டுள்ளது. வாழையின் எளிதில் அழுகும் தன்மை. தொடர்ச்சியான நுகர்வோர் தேவை மற்றும் வானிலை மாற்றங்களால். அதன் விலையானது உற்பத்தி மற்றும் சந்தை வரத்துக்கேற்ப பெரிதும் மாறுகின்றது.

Advertisement

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு மையத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு. கோயம்புத்தூர் சந்தையில் பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழை ரகங்களின் கடந்த 20 ஆண்டுகால விலை விவரங்களை ஆய்வு செய்து, உள்ளூர் சந்தைகள் மற்றும் வர்த்தகர்களிடம் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வறிக்கையின்படி, சீரான வானிலை நிலவும் பட்சத்தில், 2026 ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் சராசரி பண்ணை விலை. பூவன் ரகத்திற்கு கிலோ ரூ. 23 முதல் ரூ. 25 வரையிலும், கற்பூரவள்ளி ரகத்திற்கு ரூ. 25 முதல் ரூ. 28 வரையிலும்நேந்திரன் ரகத்திற்கு ரூ.33 முதல் ரூ. 35 வரையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது விற்பனை முடிவுகளை இதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சந்தைப்படுத்தல் தகவல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வுகள் மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி: 0422-2431405
மின்னஞ்சல்: tndemic@gmail.com ஆகும்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...