அந்த 7 நாட்கள் திரைபடம் இன்னும் 7 நாட்களில் வெளியாக உள்ளது.
கடந்த 1981ல் பாக்யராஜ் நடிப்பில் வெளியான அந்த 7 நாட்கள் படம் தற்போது அதே தலைப்பில், த்ரில்லர் கதைக்களத்தில் வெளியாகிறது.
இது தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியான நிலையில், சில மணி நேரங்களிலேயே சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காட்சிகளின் தாக்கம், கதையைப் பற்றிய ஆர்வத்தை தூண்டி, நேரடியாக திரையரங்குகளுக்குச் செல்லும் ஆவலை உருவாக்கியுள்ளது.
அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா இணைந்து நடித்துள்ள இப்படத்த்ல், பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடத்திருப்பது படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
ரொமான்ஸ் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை முரளி கபிர்தாஸ் (Bestcast Studios) தயாரித்துள்ளார். எம். சுந்தர் இயக்கத்தில், கோபிநாத் துரை ஒளிப்பதிவையும் , படத்தொகைப்பை முத்தமிழன் ராமுவும் மேற்கொண்டுள்ளனர்.
சச்சின் சுந்தர் இசையில் வெளியான ரதியே ரதியே பாடல் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செப்டம்பர் 12ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் வெளியாக இன்னும் 7 நாட்களே உள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.