கோவை: SMART KHAKKI’S திட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக செயலி மூலம் கண்டறியலாம் என கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “SMART KHAKKI’S” திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலமாக கோவை மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு 33 இரு சக்கர வாகனங்கள்,கை ரேகை கருவி,அந்த கருவி மூலமாக எளிதாக குற்ற பின்னணி இருப்பவர்களை எளிதாக கண்டுபிடிக்க உதவுவது, Body Camera,DD Machine,Advance Walky Talky,E challan Machine உள்ளிட்ட புதிய உபகரணங்களை போலீசாருக்கு வழங்கி இருசக்கர வாகனத்தை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Advertisement

குற்றவியல் தடுப்பு,போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன்,
SMART KHAKKI’S திட்டம் மூலமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை புகைப்படம் எடுத்து செயலில் பதிவு செய்தால் அவர்களின் முழு தகவல் போலீசாருக்கு கிடைக்கும் என்றும் 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்கள் பேட்ரோல் தயார் நிலையில் இருக்கும் என தெரிவித்தார்.
அதுபோல இந்த திட்டம் மூலமாக கல்லூரி,பள்ளி போன்ற பகுதியில் எந்தவிதமான பிரச்சனைகள் இல்லாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை இந்த பேட்ரோல் வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனவும் இந்த இருசக்கர பேட்ரோல் வாகனங்கள் ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கு இரண்டு முதல் மூன்று வரை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
சூலூர் பகுதியில் காவலரை கத்தியால் குத்திவிட்டு அவர் மனைவியிடம் நகையில் பறித்துச் சென்று திருடர்கள் குறித்து துப்பு கிடைத்து விட்டதாகவும் விரைவில் அவர்களை கைது செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.அதேபோல சூலூரில் பிடிபட்ட 235 கிலோ கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து வேற மாநிலத்திற்கு கொண்டு செல்லும் வழியில் தகவல் கிடைத்து அதனை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.
போதைப்பொருள் குறித்து இளைஞர்களிடம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தற்போது கல்லூரிகள் திறந்து இருப்பதினால் மாணவர்களுடன் நேரடியாக சென்று போதைப்பொருள் தீமை குறித்து எடுத்துரைத்து வருவதாகவும் கூறினார்.