கோவை பூ மார்க்கெட்டில் சுங்கக் கட்டணம் உயர்வால் வாக்குவாதம்…

கோவை: கோவை பூ மார்க்கெட்டில் சுங்கக் கட்டண உயர்வால் ஒப்பந்ததாரருக்கும் வியாபாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாநகராட்சி மலர் சந்தையில் சுங்கக் கட்டண உயர்வு தொடர்பாக, பூக்களை இறக்க விடாமல் ஒப்பந்ததாரர் தடுத்ததால் வியாபாரிகளுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement

இந்த மலர் சந்தைக்கு சேலம், சத்தியமங்கலம், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை ஒரு டிப்பருக்கு ரூ.2-ம், ஒரு மூட்டைக்கு ரூ.4-ம் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 40 நாட்களுக்கு முன்பு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை எடுத்த ஒப்பந்ததாரர், ஒரு டிப்பருக்கு ரூ.5-ம், ஒரு மூட்டைக்கு ரூ.10-ம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Advertisement

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வியாபாரிகள், மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தையே செலுத்த முடியும் எனக் கூறி, உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த மறுத்தனர்.

இதற்கிடையே, இன்று மலர் சந்தைக்கு வந்த பூக்களை இறக்க விடாமல் ஒப்பந்ததாரர் தடுத்ததால், வாகனங்களில் பூ மூட்டைகள் தேங்கின. இதையடுத்து, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement

இதில், ஒரு டிப்பருக்கு ரூ.4-ம், ஒரு மூட்டைக்கு ரூ.9-ம் வழங்க வியாபாரிகள் தற்காலிகமாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பூக்கள் இறக்கப்பட்டு வியாபாரம் மீண்டும் தொடங்கியது.

சுங்கக் கட்டண உயர்வால் பூ வியாபாரிகள் மட்டுமின்றி, மலர் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...