Header Top Ad
Header Top Ad

கோவையில் (TNAU) தேனீ வளர்ப்பு, மதிப்பூக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி; நீங்களும் பங்கேற்கலாம்!

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) தேனி வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறிது TNAU கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் மாதத்திற்கான பயிற்சி, 8ம் தேதி (திங்கட்கிழமை) அன்று அளிக்கப்படும்.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள் :

  • தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்
  • பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம்
  • தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம்
  • தேனைப் பிரித்தெடுத்தல்
  • தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம்

பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9 மணிக்கு பல்கலை வளாகத்தில் செயல்படும் பூச்சியியல் துறைக்கு வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சிக் கட்டணம் ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடையாக செலுத்த வேண்டும்.

பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

Advertisement

பயிற்சி நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை.

மேலும் விபரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணை அழைக்கலாம்

சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி 9ம் தேதி மற்றும் 10ம் தேதி என்ற ஒரு நாட்கள் நடைபெறும்.

சிறுதானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் கீழ்க்காணும் மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

  • பாரம்பரிய உணவுகள்
  • பிழிதல்
  • அடுமனைப்பொருட்கள்
  • உடனடி தயார்நிலை உணவுகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) – பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம்: அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகம்.

பயிற்சி நேரம்: காலை 9- மாலை 5 மணி.

மேலும் விபரங்களுக்கு 94885 18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Recent News