மேட்டுப்பாளையத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம்!

கோவை: மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா கௌமார மடாலயத்தில் நடைபெற்றது.

மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ தியாகராய திருத்ய கலாமந்திர் பரதநாட்டியப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இப்பள்ளியை கங்கா நரேந்திரன் நடத்தி வருகின்றார்.

இதுவரை 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் பயின்றுள்ளனர்.

நாட்டிய மாமணி, நாட்டிய தென்றல், நாட்டிய சிரோன்மணி போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.இதனிடையே மாணவி ஸ்ரீஹரிணிகாவின் அரங்கேற்ற விழா சரவணம்பட்டியிலுள்ள கெளமார மடாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம் 25ம் குருமகா சந்நிதானம், உட்பட அடிகளார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீஹரிணிகாவின் வித்ய விகாஸ் சர்வதேசப் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகின்றார். தனது 6 வயது முதல் தனது குரு சுங்க நரேந்திரன் அவர்களிடம் பரதநாட்டியத்தை 10 ஆண்டுகளாக பயின்றுவரும் நிலையில், கடந்த
2022ல் இவருக்கு சலங்கை அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற நாட்டிய நாடகங்களிலும் கலந்துள்ளார்.

இவர் உலக கலைச் சங்கம் நடத்திய நடனத் திருவிழா 2024 ல் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

Video

Join WhatsApp