கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததின் பெயரில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அலுவலகத்தின் பிரதான கட்டடங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பதிவறைகள், கூட்டரங்குகள், பின்புற வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது, அந்த மிரட்டல் உண்மையா அல்லது தவறான தகவலா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இமெயில் அனுப்பிய நபரை கண்டறிவதற்காக சைபர் குற்றப்பிரிவு போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement

இச்சம்பவம் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடுமையான பாதுகாப்பு எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் அலுவலக பணியாளர்களும் அச்சமடைந்தனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group