கோவையில் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் விபத்து- 5 பேர் படுகாயம்…

கோவை: கோவை- சத்தி சாலையில் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கோவை அன்னூர் சத்தியமங்கலம் சாலையில் நேற்றிரவு தனியார் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது குரும்பபாளையம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவர்கள் நித்தின், சந்தோஷ் குமார், ஆகாஷ் குமார், கிஷோர், இமயவரம்பன் ஆகியோர் காயம் அடைந்தனர். நித்தின் மற்றும் சந்தோஷ் குமார் இருவருக்கும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்த அருகில் இருந்தகள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து காயமடைந்த ஐந்து பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp