கோவை மாநகராட்சியில் தெரு நாய் தொல்லை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!

கோவை: கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. ஆர்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய் கருத்தடை மையம் செய்யப்பட்டு வருகிறது . கோவை மாநகராட்சி நிர்வகிக்கும் இந்த கருத்தடை மையத்தில், கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பிடித்து வரும் தெரு நாய்கள், கருத்தடை செய்து இதே பகுதியில் விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கருத்தடை செய்யப்படும் நாய்கள் இதே பகுதியில் விடுவதனால், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 82, 84, 86வது வார்டு மக்கள் இதனால் நாய் கடிபடுவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

Advertisement

பெரியவர்கள் குழந்தைகள் என பலரும் நாய் கடிபடுவதாகவும் பொது மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே நாய்களுக்கு கருத்தடை செய்து நாய்களின் அதே வாழ்விடப் பகுதியில் விடுபட வேண்டும் என்றும், மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் கருத்தடை மையத்தை இடமாற்ற வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கைதி தப்பியதில் பாதுகாப்பு அலட்சியம்; 2 போலீசார் மீது நடவடிக்கை

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பிய சம்பவத்தில், உதவியதாக கூறப்படும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டிய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.