கோவையில் மக்கள் பயன்பாட்டிற்கு செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர்…

கோவை: கோவையில் செம்மொழி பூங்கா முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி காந்திபுரம் பகுதியில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் 208.50 கோடி ரூபாய் மதிப்பில் செம்மொழிப் பூங்கா பணிகள் 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்பொழுது முதல்வரால் திறக்கப்பட்டது.

இந்த பூங்காவில் செம்மொழி வனம் மூலிகை தோட்டம் மகரந்த தோட்டம் நீர் தோட்டம் மணம்கமிழ் தோட்டம் பாலைவன தோட்டம் மலர் தோட்டம் மூங்கில் தோட்டம் நட்சத்திரத் தோட்டம் ரோஜா தோட்டம் பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன

மேலும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம் கல் இலவு மிளகு மரம், கடல் திராட்சை திருவோட்டு மரம் வரிகமுகு மழை பூவரசு குங்குமம் மரம் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோட்டத்தில் 2000த்துக்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் கடையேழு வள்ளல்கள் ஆன பேகன் பாரி அதியமான் காரி ஆய் நள்ளி மற்றும் ஓரி ஆகியவர்களின் கொடைத்தன்மை கல் சிலைகளாக நிறுவப்பட்டுள்ளது.

மேலும் இந்த செம்மொழி பூங்காவில் அனுபவ மையக் கட்டிடம் 500 பார்வையாளர்கள் அமரும் வகையில் திறந்த வெளி அரங்கம் பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு அறை உணவகம் ஒப்பனை அறை செயற்கை நீர்வீழ்ச்சி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செம்மொழிப் பூங்கா வளாகத்திற்குள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு வடிகால் அமைப்பு இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் கூடிய வசதியும் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுப் பகுதி உள்விளையாட்டு அறை மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கும் ஏதுவாக விளையாட்டு திடல் போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

மேலும் நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவம் மைய கட்டிடத்தில் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் கூடிய அருங்காட்சியகம் தாவரவியல் அருங்காட்சியகம் இளம் வயதினர் படிப்பதற்கு ஏதுவாக படிப்பகம் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் பாக்டரி வாகனங்கள் ஆகியவையும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த செம்மொழி பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp