Header Top Ad
Header Top Ad

முதல்வர் கோப்பை கூடைப்பந்து: கோவை அணிக்கு இடம்!

கோவை: மாநில அளவிலான முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டியில், லீக் சுற்றில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும், சென்னை மற்றும் கோவை அணிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் கூடைப்பந்து மற்றும் கோ-கோ ஆகிய இரு விளையாட்டு போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.

வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து போட்டி நடைபெறும் நிலையில், 7ஆம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

38 மாவட்டங்களில் இருந்து தலா ஒரு மாணவர் மற்றும் மாணவியர் அணிகள் என 76 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

Advertisement

முதற்கட்டமாக, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் நாக்-அவுட் முறையில் போட்டியிட்ட 38 மாவட்டங்களிலிருந்து 4 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் லீக் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும், சென்னை மற்றும் கோவை அணிகள் இடம்பெற்றுள்ளன.

லீக் போட்டியில் மோதும் 4 அணிகளில், அதிக புள்ளிகள் பெரும் அணிகள் முதல் இடம் பெற்று வெற்றிபெறும். அடுத்தடுத்து புள்ளிகள் பெரும் அணிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெரும்.

கூடைப்பந்து போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் அணிகள் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.

வெற்றிபெறும் முதல் அணிகளுக்கு 9 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக, ரூபாய் 6 லட்சமும், மூன்றாம் பரிசாக, 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

இந்த போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போக்குவரத்து, உணவு, தங்கும் வசதி என அனைத்து வசதிகளும் விளையாட்டு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Recent News