கோவை: சின்னியம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த கார் தீ பிடித்த எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சின்னியம்பாளையம் அருகே சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது. காரின் ஓட்டுநர் காரை ஓரம்கட்டி இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கபதி. இவர் தனது காரில் இன்று காலை அவினாசி சாலையில் சென்றுள்ளார்.
அப்போது சின்னியம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஸ்ரீரங்கபதி காரை சாலையோரம் நிறுத்தி கீழே இறங்கினார்.
முன்பக்க பேனட்டில் இருந்து வெளியேறிய புகை திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. சிறிய தீ பரவிய போதே அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த பீளமேடு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து கார் பெரிதளவு எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கபதி சாமர்த்தியமாக காரை ஓரம்கட்டி இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

