லைகாவுக்கு ஆதரவு.. சொன்னதை செய்து காட்டிய மணிரத்னம்!

தோல்வியால் சரிந்து கிடந்த லைகா நிறுவனத்துடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார் மணிரத்னம். புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

Advertisement

இயக்குநர் மணிரத்னம் என்றாலே காதலர்களுக்கு கொண்டாட்டம்தான். காதலை மையப்படுத்தி இவர் எடுத்த படமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

மனைவி டெல்லிக்கு சென்றதால் கணவர் விபரீத முடிவு!

தொடர்ந்து காதல் படங்களில் கதையை தேர்வு செய்த மணிரத்னம், சின்ன மாற்றமா வரலாற்று படத்தை எடுத்தார். பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்தில் உருவாகி இரண்டு பகுதிகளும் மாஸ் ஹிட் கொடுத்தன.

Advertisement

காதல் படத்தை எடுத்த மணிரத்னமா இது? என்ற பேச்சுகளும், வரவேற்புகளும் குவிந்தன. இதையடுத்து அவர் எடுத்த தக் ஃலைப் படம் பெரும் தோல்வியை சந்திதது.

Thug Li

இதனால் அவரின் அடுத்த படைப்பு என்ன என்ற கேள்வி எழுந்தன. இந்த நிலையில் இன்று தனது அடுத்த படத்தின் குறித்த புதிய அறிவிப்பு வெளியானது.

Advertisement

இந்த நிலையில் படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்துள்ளது. முன்னதாக லைகா நிறுவனம் எடுத்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. முக்கிய பெரிய பட்ஜெட் படங்கள் அத்தனை தோல்வியை கொடுத்ததால் லைகா நிறுவனத்தால் எழ முடியவில்லை.

Maniratnam New Direction under Lyca

சந்திரமுகி 2, லால் சாலம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், தமிழ் படங்களை இயக்காமல் இருந்தது.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் மட்டும் கூட்டணி அமைத்து சிக்மா படத்தை தயாரித்து வரும் நிலையில், மணிரத்னத்துடன் மீண்டும் கூட்டணி போட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கும் படத்தில், விஜய் சேதுபதி 2வது முறையாக இணைந்துள்ளார். மேலும் சாய் பல்லவி முதன்முறையாக மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளார். வழக்கம் போல ஏ.ஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

Maniratnam New movie announced

ஏற்கனவே ஒரு மேடையில் பேசும் போது நிச்சயம் சாய் பல்லவியை என் படத்தில் நடிக்க வைப்பேன் என மணிரத்னம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் நிச்சயம் காதல் படம்தான் என முடிவு செய்துள்ள ரசிகர்கள், பட அறிவிப்பு வெளியானதுமே கொண்டாட ஆரம்பித்துள்ளனர். திரையில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஜோடியை காண ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

Amazon Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

ஓடிடியில் சுதந்திர தின வருகையாக வரும் ‘பாரத் பாக்ய விதாத்தா’! வரிசை கட்டி நிற்கும் 9 படங்கள்…!

கடந்த இரு தினங்களில் வெளியான மற்றும் அடுத்த வாரம் வெளியாக உள்ள OTT படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த முக்கிய தகவல்கள் ரசிகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.