கோவையில் முதல்வர் ரோடு ஷோ… 6 கி. மீ தூரம் திரண்டிருந்த மக்கள்!

கோவை: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ-வில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். 6 கி. மீ தூரம் திரண்டிருந்த மக்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளார்.

திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை நிகழ்த்திய முதல்வர் ஸ்டாலின் நேற்று காலையில் ஈரோட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் கோவை புறப்பட்ட அவர் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலை அங்கிருந்து திறந்த வேனில் நின்று கை அசைத்தவாறு ரோடு ஷோ-வில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

அவினாசி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், முதல்வரை வரவேற்று மேளம், தாளம் முழங்க, உற்சாக கோஷமிட்டனர்.

சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக மக்கள் கூடியிருந்து வரவேற்பளித்தனர்.

பின்னர் பீளமேடு கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரை ஆற்றினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாவட்ட எல்லையில் உள்ள மதுபான கடைகள் மூட உத்தரவு- மீறினால் நடவடிக்கை…

கோவை: கோவை மாவட்ட எல்லையில் உள்ள மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றப் பொதுத் தேர்தல் 09.04.2026 அன்று நடைபெற உள்ளதால் மக்கள்...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...