அதிர்ச்சி: கோவையில் ஆம்புலன்சில் வந்த கஞ்சா, போதை மாத்திரைகள்!

கோவை: கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்எஸ் புரம் போலீசார் சின்னதுரை கடை வீதி பகுதியில் ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

Click here to Read news கோவை ஆழ்துளை கிணறுகள்: தீயணைப்புத்துறைக்கு உத்தரவு

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் (29) மற்றும் தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த முஸ்தபா (28) என்பதும், அவர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Click here to read news சூர்யாவிடம் வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்… ஜோதிகா கொடுத்த பதிலடி!

அவர்களிடம் இருந்து 3 கிலோ 81 கிராம் கஞ்சா மற்றும் 48 கிராம் மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.