பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!

கோவை: பெற்றோர் சண்டையால் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தன்னந்தனியாக சுற்றிய சிறுமியை கோவை பிங்க் பேட்ரோல் போலீசார் மீட்டனர்

Advertisement

சாய்பாபா காலனி பிங்க் பேட்ரோல் போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தடாகம் ரோடு வெங்கடபுரம் பகுதியில் ஒரு சிறுமி நிற்பதை போலீசார் பார்த்தனர்.

Click here to Read news கோவை ஆழ்துளை கிணறுகள்: தீயணைப்புத்துறைக்கு உத்தரவு

அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுமிக்கு 14 வயது என்பதும், தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், அந்த சிறுமி கூறிய தகவல்களால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

அந்த சிறுமி கூறுகையில், “எனது வீட்டில் தாய் மற்றும் தந்தை இடையே தினமும் சண்டை நடைபெறுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.

Click here to read news ரம்ஜான் பண்டிகை – கோவையில் 5000 பேருக்கு இலவச பிரியாணி…

Advertisement

சம்பவத்தன்றும் பெற்றோர் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதனால் எனக்கு கடும் மனவேதனை ஏற்பட்டது. அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி நடந்தே வெங்கடபுரம் வந்துவிட்டேன்” என்றார்.

POLICE RESCUED GIRL

இதையடுத்து போலீசார் அந்த சிறுமியை மீட்டு தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரது தந்தையை வரவழைத்து அவருக்கும், சிறுமிக்கும் அறிவுரை கூறி பத்திரமாக அவருடன் அனுப்பி வைத்தனர்.

சம்மரில் சருமத்தை பாதுகாப்பது எப்படி … லிங்க் இதோ…!

Flipkart Link 1
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.