கோவை: மூங்கிலில் இரும்பு கம்பியை கொண்டு தேசத்தலைவர்களின் ஓவியத்தை வரைந்துள்ளார் கோவை கலைஞர் UMT ராஜா.
குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த கலைஞர் UMT ராஜா மூங்கிலில் தேச தலைவர்களின் ஓவியத்தை வரைந்துள்ளார்.
இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூங்கிலில் இரும்பு கம்பியை நெருப்பில்காய்த்து எட்டு தேசத்தலைவர்களின் ஓவியத்தை வரைந்துள்ளார் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கலைஞர் UMT ராஜா என்பவர்.

12 மணி நேரம் செலவழித்து என்றென்றும் அழியாத காவியங்கள் என்ற முறையில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக இந்த ஓவியத்தில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், ஜவர்கலால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், காமராஜர், பகத்சிங் போன்ற தலைவர்களின் ஓவியத்தை வரிசைப்படுத்தி வரைந்துள்ளார்.

