கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு தேதி அறிவிப்பு!

கோவை: கோவை நேரு ஸ்ட்டியம் அருகே கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை நவம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும், இது கோவைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் விழா இன்று முதல் துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விழால் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவை விழாவின் தொடக்க நிகழ்வாக கொடிசியா மைதானத்தில் SKY DANCE எனப்படும் ஒளி, ஒலி லேசர் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மாநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை துவக்கி வைத்த பின் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சி வியந்து பார்க்கும் அளவிற்கு நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் சிறப்புடன் சிறப்பாக நடப்பட்டு வருகிறது. இந்த விழா 50 ஆண்டுகள் கடந்தும் நம் மண்ணின் பெருமையை சொல்லும்.

அனைத்துத் துறைகளிலும் ஒரு மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்றால் அது கோவை மாவட்டம் தான். அத்தகைய சான்றோர்கள் உருவாக்கிய மண் கோவை மண்.

வரும் 26 ஆம் தேதி கோவை மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கின்ற வகையில் செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். அது கோவைக்கு பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும். முதலமைச்சரின் எண்ணங்களைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும். அதிலும் கோவைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு முறையும் கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும்பொழுது எல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிவார்.

நானும் என்னுடைய ஊருக்கு சென்றால் YI- Young Indian சட்டையை தான் அணிவேன். இனி ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பங்கும் இந்த கோவை விழாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த கோவை விழா நம்முடைய விழா குடும்ப விழா. இவ்வாறு செந்தில் பாலாஜி பேசினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.