கோவையில் ஆம்புலன்ஸ்-ஆக மாறிய அரசு பஸ்…! பயணி காப்பாற்றப்பட்டார்…!

கோவை: கோவையில் பயணி ஒர்வருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நேரத்தில் உதவிய அரசுப் பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் போக்குவரத்து கழகத்தின் கோவை கிளையில் தினேஷ்குமார் ஓட்டுனராகவும், சசிகுமார் நடத்துனராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 9ம் தேதி இவர்கள் இருவரும் அன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மாலை 7.45 மணி அளவில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 55 வயது ஆண் பயணிக்கு திடிரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனைப் பார்த்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

Advertisement

உடனே பேருந்து நடத்துனர் தினேஷ் குமார் மற்றும் ஓட்டுநர் சசிகுமார் இருவரும் பேருந்தை நேராக மருத்துவமனைக்கு செலுத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பேருந்து அன்னூர் அருகில் இருந்த குமரன் மருத்துவமனைக்குச் சென்றது.

அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சையில் அந்தப் பயணி தற்போது நலமுடன் உள்ளார். பயணியைக் காப்பாற்றிய தினேஷ்குமார் மற்றும் சசிகுமாரை பயணிகள் வெகுவாகப் பாராட்டினர்.

இதனிடையே இன்று கோயம்புத்தூர் கோட்டத்தின் முதுநிலை துணை மேலாளர் மனிதவளம் இருவரையும் நேரில் அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, அவர்கள் நற்செயலைப் பாராட்டினார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...