கோவை: கோவையில் வீட்டில் விபசாரம் நடத்தி வந்த மூதாட்டி உட்பட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இடையர் வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சாதாரண உடையில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து விசாரணை நடத்தினர். அதில் அங்கு இளம் பெண்ணை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர் சாமி ஐயர் புது வீதியைச் சேர்ந்த சூரிய கலா (60) மற்றும் தொண்டாமுத்தூரை அடுத்த தளியூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (48) ஆகியோரையும், அவர்கள் விபசாரத்திற்கு வைத்திருந்த சுந்தராபுரத்தைச் சேர்ந்த இளம் பெண்ணையும் பிடித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Click here to read news ரம்ஜான் பண்டிகை – கோவையில் 5000 பேருக்கு இலவச பிரியாணி…
கோவையில் வாடகைக்கு வீட்டை எடுக்கும் சிலர், குடும்பம் நடத்துவது போல் நாடகமாடி இதுபோல் விபசாரத் தொழில் நடத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள், தனியாக சிக்கும் ஆண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. எனவே வீட்டுகளை வாடகைக்கு விடுவோர் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

