ரம்ஜான் பண்டிகை- கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் தொழுகை…

கோவை: கோவையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10,000க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.

Advertisement

ரம்ஜானை முன்னிட்டு நடைபெற்ற தொழுகையில் உலக நாடுகள் போர் பதற்றம் நீங்கி அமைதி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடினர்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாக இன்று வரை கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைபுதூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.இந்த தொழுகையில்,உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் போர்கள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு தொழுகையில் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஒரே இடத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக வருகை புரிந்து தொழுகை மேற்கொண்டனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.