கோவை: கோவை சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சரிந்து விழுந்தன.
தொண்டாமுத்தூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, காளாம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகள் விவசாய பூமியாக உள்ளது.
இங்கு வாழை, தக்காளி, பீர்க்கங்காய், புடலங்காய், வெங்காயம், சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன.
தீத்திபாளையத்தில் வாழை மரங்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
Read Also குழந்தை கடத்தல் கும்பலா? அதிர்ச்சி வீடியோ…!
இந்த நிலையில், நேற்று முன்தினம் தீத்திபாளையம் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்து ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் குலையோடு சாய்ந்து விழுந்தன.
சில பகுதிகளில் பீர்க்கங்காய், புடலங்காய் கொடிகளும் சேதமடைந்தன. அறுவடைக்கு தயாரான நிலையில் பயிரிட்ட காய்கறிகள் சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு தமிழக இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

