கோவை: கோவையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அண்டா பதுக்கிய திமுக பெண் பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 180 குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடந்து வருகிறது. இந்த குழுவினர் மத்திய துணை இராணுவ உதவியுடன் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
லைகாவுக்கு ஆதரவு.. சொன்னதை செய்து காட்டிய மணிரத்னம்! READ news
இதுவரை 1 கோடி மதிப்பு உள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று ரத்தினபுரி பெரியார் தெரு பகுதியில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான பறக்கும் படை குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு உள்ள டைலர் கடை ஒன்றில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சில்வர் அண்டா மற்றும் திமுக முதல்வர் துணை முதல்வர் உதயசூரியன் சின்னங்கள் உடன் கூடிய 15 துணி பைகள், வாக்காளர்கள் விபரம் அடங்கிய ஆவணம், டோக்கன் உள்ளிட்ட பொருட்களை பறக்கும் படைகுழு கைப்பற்றியது
இது தொடர்பாக ரத்தினபுரி பெரியார் தெருவை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மனைவி மகாலட்சுமி (வயது 26) என்பவர் மீது போலீஸ் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரி நாகராஜன் புகார் செய்தார். அதன் பேரில் மகாலட்சுமி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மகாலட்சுமி திமுக பிரமுகர் என கூறப்படுகிறது. இது விசாரணை நடந்து வருகிறது.
வீட்டிற்குள் செடி வளர்க்க ஆசையா… இந்த பதிவு உங்களுக்கு தான்…!

