கோவை: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரயில்வே ஊழியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
1968ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி AIRF/ SRMU சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் செப்டம்பர் 19ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு பல்வேறு ரயில்வே பணிமனைகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை ரயில்வே பணிமனையில் SRMU சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் ரயில்வே ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர் மேலும் எட்டாவது சம்பள கமிஷன் கமிட்டியை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.