கோவை: கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தங்கம் விலை தினந்தோறும் எகிறி வரும் நிலையில், இன்று காலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.280 அதிகரித்தது.
அதன்படி, கோவையில் தற்போது 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,060 ஆகவும், ஒரு பவுன் ரூ.80,480 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,330 ஆகவும், ஒரு பவுன் ரூ.66,640 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விலையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று கிராமுக்கு ரூ.3 அதிகரித்து, தற்போது ஒரு கிராம் ரூ.140 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,40,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈