Railway Announcement: கோவை வழியே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

Railway Announcement: பயணிகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் (Coimbatore) – ஜெய்ப்பூர் (Jaipur) இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர் – ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (Train No: 06181) பிப்ரவரி 5, 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) கோவை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு 7, 14, 21 ஆகிய சனிக்கிழமைகளில் மதியம் 1.25 மணியளவில் ஜெய்ப்பூரை சென்றடையும்.

அதே போல் இதற்கு மறுமார்க்கமாக ஜெய்ப்பூர் – கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் (Train No: 06182) பிப்ரவரி 8, 15 மற்றும் 22 ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

TRAIN

இந்த சிறப்பு ரயில்களில் ஏசி 3-டையர், ஏசி 3-டையர் எகானமி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில்கள் திருப்பூர் (Tiruppur), ஈரோடு (Erode), சேலம் (Salem), ஜோலார்பேட்டை (Jolarpettai), காட்பாடி (Katpadi), ரேணிகுண்டா (Renigunta), கடப்பா (Kadapa), எர்ரகுண்ட்லா (Yerraguntla), கூட்டி (Gooty), தோன் (Dhone), குர்நூல் சிட்டி (Kurnool City), காட்வால் (Gadwal), மகபூப்நகர் (Mahbubnagar), காசிகுடா (Kacheguda), காமரெடி (Kamareddy), நிசாமாபாத் (Nizamabad), பசர் (Basar), முட்கெட் (Mudkhed), நான்டெட் (Nanded), புர்ணா (Purna), ஹிங்கோலி டெக்கன் (Hingoli Deccan), வாஷிம் (Washim), அகோலா (Akola), மால்காபூர் (Malkapur), புசாவல் (Bhusaval), ஜல்கான் (Jalgaon), நந்துர்பார் (Nandurbar), உத்னா (Udhna), பரூச் (Bharuch), வடோதரா (Vadodara), கோத்ரா (Godhra), ரத்லாம் (Ratlam), ஜவோரா (Jaora), மாண்ட்சோர் (Mandsor), நீமச் (Nimach), சித்தோர்கர் (Chittaurgarh), சண்டேரியா (Chanderiya), பில்வாரா (Bhilwara), பிஜய்நகர் (Bijainagar), நசிராபாத் (Nasirabad), அஜ்மேர் (Ajmer) மற்றும் கிஷன்கர் (Kishangarh) நிலையங்களில் நின்று செல்லும்.

சேலம் ரயில்வே கோட்ட எல்லைக்குள் இந்தச் ரயில்களின் நேரங்கள் பின்வருமாறு:

கோயம்புத்தூர் – ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் (வியாழக்கிழமை)

திருப்பூர் – 03.13 / 03.15 மணி
ஈரோடு – 04.05 / 04.10 மணி
சேலம் – 05.10 / 05.15 மணி
ஜோலார்பேட்டை – 07.32 / 07.42 மணி


ஜெய்ப்பூர் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (புதன்கிழமை)

ஜோலார்பேட்டை – 01.55 / 02.05 மணி
சேலம் – 03.50 / 03.53 மணி
ஈரோடு – 04.50 / 04.55 மணி
திருப்பூர் – 05.38 / 05.40 மணி

இந்த தகவலை சேலம் கோட்ட தெற்கு ரயில்வே பொது தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ளார். பயணிகள் முன்பதிவு செய்து இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

எப்படி தவழ்ந்து வந்தார்? எப்படி முதல்வர் ஆனார் என்பது நாட்டிற்கு தெரியும்- எடப்பாடி பழனிச்சாமியை விளாசிய செங்கோட்டையன்…

கோவை: எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சார் ஆனார்? எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்கு தெரியும் என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு...

Video

Join WhatsApp