கோவையில் இனி பெண்கள் அழைத்தால் வரும் பிங்க் போலீஸ் வாகனம்!

கோவை: கோவை மாநகரில் பெண்களின் பாதுகாப்பிற்காக 7 பிங்க் நிற ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ரூ.12 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டு, அவ்வாகனங்களின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதல்வர் கடந்த 11ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிங்க் ரோந்து வாகனம்

இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள், தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, மதுரை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கோவைக்கு ஒதுக்கப்பட்ட 7 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களை நேற்று புலியகுளம் மகளிர் கல்லூரியில் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தொடங்கி வைத்தார். மேலும் புதிதாக 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சகோ தூண்களையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கோவை மாநகரில் சிங்காநல்லூர், காட்டூர், சாய்பாபா காலனி, ஆர்எஸ் புரம், போத்தனூர், குனியமுத்தூர் மற்றும் உக்கடம் காவல் நிலையங்களுக்கு தலா ஒரு இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிங்க் ரோந்து வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து சென்று வரும். பெண் எஸ்ஐ அல்லது சிறப்பு எஸ்ஐ தலைமையில் 4 போலீசார் சுழற்சி முறையில் அந்த வாகனத்தில் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.

பெண்கள் சமந்தமாக புகார் வந்தால் இந்த வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விடும். இந்த வாகனத்தில் ஜிபிஎஸ், கேமிரா என அனைத்து வசதிகளும் உள்ளன. அதேபோல கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்மார்ட் கேமிரா, ஸ்பீக்கருடன் தூண்கள் அமைக்கும் திட்டம் மகளிர் தினத்தில் தொடங்கப்பட்டது.

முதற் கட்டமாக காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இந்த சகோ திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மேலும் 4 இடங்களில் இந்த சகோ திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

சகோ திட்டம்

புலியகுளம் மகளிர் கல்லூரி, ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி, நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும் டவுன்ஹால் கோனியம்மன் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் சகோ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சகோ தூணில் உள்ள எஸ்ஓஎஸ் பட்டினை அழுத்தினால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசாருக்கு தகவல் செல்லும். அங்கிருந்து தூணில் உள்ள ஸ்பீக்கர் மூலம் கேமிராவில் பார்த்து போலீசார் பேசுவார்கள்.

அதன் பின்னர் சமந்தப்பட்ட இடத்திற்கு 2 அல்லது 3 நிமிடங்களில் பிங்க் ரோந்து வாகன போலீசார் அல்லது ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வார்கள். அங்கு பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.