பிரதமர் வருகை: கோவை ஏர்போர்ட்டில் கட்டுப்பாடுகள்!

கோவை: பிரதமர் மோடி வரும் 19ம் தேதி கோவை வருவதை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்க்கிங் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை விமான நிலைய இயக்குனர் கூறியதாவது:-

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களால் வரும் நாட்களில் வாகன நிறுத்தம் மற்றும் டெர்மினல் அணுகுமுறையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 20ம் தேதி வரை விமான நிலைய டெர்மினல் முன் மற்றும் ‘Y’ ஜங்ஷன் பகுதியில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை இந்த பகுதிகளில் எந்தவொரு வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.

Advertisement

விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். இரவு நிறுத்தம் தேவையிருந்தால், பார்கிங் பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

நவம்பர் 18ம் தேதி காலை 6 மணி முதல் நவம்பர் 19ம் தேதி மாலை 6 மணி வரை டெர்மினல் முன்பகுதியில் மற்றும் Y-ஜங்ஷனில் எந்தவொரு வாகனத்தை நிறுத்தவும் முழுமையாகத் தடை செய்யப்படுகிறது.

டெர்மினல் முன் 3 நிமிடத்திற்கு மிகாமல் பிக்கப்–டிராப் வசதி தொடர்ந்து வழக்கம் போல் அனுமதிக்கப்படுகிறது.

புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை அறிய, கோவை சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் சேனல்களில் தொடர்ந்து கவனிக்கலாம்

இவ்வாறு விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் அறிவிப்புகள் நமது செய்தித்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும். இணைந்திருங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்/பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது....

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.