கோவை: கோவையில் மெத்தாபிட்டமின் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
கோவையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணி சென்றனர். அப்போது அங்குள்ள ரேஷன் கடை அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தாபிட்டமின் என்ற போதைப்பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு உக்கடத்தை சேர்ந்த அப்துல் பஷித் (22), சதாம் உசேன் (29) மற்றும் கரும்புக்கடையை சேர்ந்த முகமத் சுஹைப் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

