கோவை மெட்ரோ திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம்- மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்…

கோவை: மெட்ரோ ரயில் திட்டத்தை மோடி அரசு ரத்து செய்ததாக கூறி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வர கடந்த மூன்று வருடங்களாக ஏற்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கோவையைப் பொறுத்தவரை அவிநாசி சாலையிலும் திருச்சி சாலையிலும் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கு வழித்தட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கையானது தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல் மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.

பின்னர் தமிழக அரசு கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரத்தில் மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு அனுப்பியது. இந்நிலையில் மத்திய அரசு அதனை நேற்று திருப்பி அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு விளக்கங்கள் கேட்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே துறை நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் வழங்கப்பட்டு சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாம நிலையில் தற்போது திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கோவை மற்றும் மதுரை நகர மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை தந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் அச்செயலை கண்டித்து கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேசிய ஈஸ்வரன் கோவையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் முக்கியம் எனவும் ஆனால் அதனை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். இன்று கோவைக்கு வரும் பிரதமர் மோடி கோவைக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்

15 ஆண்டுகள் போராடி பெற்ற மெட்ரோ ரயில் திட்டத்தை மறுத்தது கண்டனத்திற்குரியது என்றார். கோவை மற்றும் மதுரை நகரங்களை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட பல்வேறு நகரங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு கோவைக்கு அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

உடனடியாக அந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதற்கான உறுதியை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் கோவை மக்கள் கொந்தளித்து இருக்கும் நிலையில் கோவைக்கு பிரதமர் மோடி வந்துள்ளதை கண்டிப்பதாக தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.