Duke பைக்கை டோ செய்து திருடி சென்ற கொள்ளையர்கள்… வீடியோ

கோவை: விலை உயர்ந்த Duke பைக்கை திருடிவிட்டு டோ செய்து எடுத்துச் நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகரில் அண்மைக்காலமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிக அளவு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாநகர் ஒண்டிப்புதூர் பகுதியில் அமுல் ஆண்டனி என்பவரின் விலையுயர்ந்த டியூக் பைக்கை ஐந்து பேர் திருடிச் சென்றுள்ளனர்.நேற்று இரவு வழக்கம்போல் அவர் பைக்கை வீட்டில் வெளியே நிறுத்திச் சென்ற நிலையில் இன்று காலை எழுந்து வந்து பார்த்தபொழுது அவரது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் இவரது வாகனத்தை திருடிச் சென்றது பதிவாகியுள்ளது.

இரண்டு இரவு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் அப்பகுதியில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு இவரது வாகனத்தின் பூட்டை உடைத்து விட்டு திருடியுள்ளனர் ஐந்து பேரில் ஒருவர் இவரது வாகனத்தில் அமர்ந்துகொள்ள இன்னொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் உதவியுடன் டோ செய்து திருடிச் சென்றுள்ளனர்.

இந்த காட்சிகளை கொண்டு அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சியின் உதவியுடன் பைக்கை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தேவையான இடங்களில் திமுக.,வுக்கு எதிர்ப்பு குரல் – காங்கிரஸ் கண்ணன் ஆவேசம்

கோவையில் காங்கிரஸ் உறுப்பினர் கண்ணன் கீழ்த்தட்டு மக்களுக்கு இலவச திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளதையும், அரசியல் நோக்கத்திற்காக எதிர்ப்புகள் எழுகின்றன என்றும் கூறினார்.

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.