போலீசாரிடமிருந்து தப்ப முயன்று கால்களை முறித்துக் கொண்ட வாலிபர்கள்!

கோவை: கோவையில் 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வாலிபர்கள் முவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

கோவையில் கஞ்சாவை விற்பனைக்காக கடத்திய போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று மேம்பாலத்ததின் மேலே இருந்து கீழே குதித்த மூன்று முன்னாள் குற்றவாளிகளின் கால்களில் முறிவு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து சுமார் 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோவை ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அமரர் ஜீவானந்தம் சாலை, ரூட்ஸ் மேம்பாலத்தின் கீழ் நள்ளிரவு சுமார் 11:30 மணி அளவில் ரத்தினபுரி தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகப்படும்படி இருந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ​ஜோஸ்வா தவப்பிரியன் (27), சுவிட்சன் பெர்னாட் (26), மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரணி சௌந்தர் (24) என்பது, அவர்கள் மூன்று பேரிடம் இருந்த பையைச் சோதனையிட்ட போது, தமிழக – கேரளா எல்லையான ஆனைக்கட்டியில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 5.500 கிலோ கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் போதைப் பொருளைச் சிறு பொட்டலங்களாகப் பிரித்து விற்பனை செய்ய முயன்ற போது சிக்கினர்.

அந்த மூன்று பேர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்லும் நோக்கில், மூன்று பேர்களையும் அங்கு இருந்த ரயில்வே மேம்பாலத்தின் கீழே குதித்தனர்.

இதில் ஜோஸ்வாவுக்கு வலது காலிலும், பரணி சௌந்தர் மற்றும் சுவிட்சன் பெர்னாட் ஆகியோருக்கு இடது காலிலும் முட்டிக்குக் கீழ் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.

காயம் அடைந்த மூன்று பேரையும் மீட்ட போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து. தற்போது அவர்கள் போலீஸ்காவலில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்கத் தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சூலூரில் 800 அண்டாக்கள் பறிமுதல்- பறக்கும் படை அதிரடி…

கோவை: சூலூர் அருகே திமுகவினர் 800 சில்வர் அண்டாக்களை பதுக்கி வைத்திருந்த அதனுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை...

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...