கோவையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்- ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்…

கோவை: கோவையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் புதியதாக 7100 பயனாளிகளுக்கு 10.22 கோடி மதிப்பீட்டில் ஒய்வூதிய திட்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 260 பயனாளிகளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உங்களுடன் ஸ்டாலின் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் முதல்வரால் இன்று வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் 7100 பயனாளிகளுக்கு ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் ஒய்வூதிய திட்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் 260 பயனாளிகளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகளையும் 150 தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளும்

குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.25.36 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவியும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.53,520 மதிப்பில் தையல் இயந்திரங்களையும்,

20 பயனாளிகளுக்கு ரூ.145இலட்சம் மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.30,64 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.56,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.30.54 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் என மொத்தம் 260 பயனாளிகளுக்கு ரூ.192 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இலவச பேருந்து பயணம்- மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்- வானதி சீனிவாசன் பேச்சு…

கோவை: இலவச பேருந்து பயணம் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை, வடவள்ளியில் நடைபெற்ற ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகள் மத்தியில்...

Video

ஆட்டோவில் கிடைத்த தங்க நகை… வீடு தேடி ஒப்படைத்த கோவை டிரைவர் – வீடியோ காட்சிகள்

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு பவுன் தங்க பிரேஸ்லெட்டை வீடு தேடி சென்று ஒப்படைத்த கோவை டிரைவர் மணிகண்டன் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
Join WhatsApp