Coimbatore Power Cut: கோவையில் ஜூலை 24ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, கோவை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ஜூலை 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:-
ஒத்தக்கல் மண்டபம் துணை மின்நிலையம்:-
அரிசிபாளையம், எம்.எம்.பட்டி மற்றும் செட்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை அமலாகும்.
பீடம்பள்ளி துணை மின்நிலையம்:-
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம், சின்னகுயிலி, நாயக்கன் பாளையம் மற்றும் பள்ளபாளையம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இரும்பறை துணை மின்நிலையம்:-
இரும்பறை, பெத்திக்குட்டை, சாம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வயலிபாளையம், இலுப்பநத்தம், ஆனடசம்பாளையம், அக்கரை செங்கப்பாளையம், வடக்கலூர் மற்றும் மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை அமலாகும்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலதிக இடங்களிலும் மின்தடை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை உங்கள் சுற்றுவட்டாரத்திலும் பகிருங்கள்.
Coimbatore Power Cut
