Header Top Ad
Header Top Ad

கோவையில் ஆகஸ்ட் 2ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: கோவையில் ஆகஸ்ட் 2ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 2ஆம் தேதி, காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை, கோவை மாவட்டத்தில் உக்கடம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணக்கரா வீதி சுற்றுவட்டாரங்கள், டி.கே.மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாளையம், உக்கடம், சுங்கம், ஆட்சியர் அலுவலகம், கோவை அரசு மருத்துவமனை, கோவை ரயில் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

தற்காலிக மின்தடைக்கு பொது மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேற்கூறிய பகுதிகளுடன் வேறு சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

இந்த செய்தி அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள்.

Advertisement

Recent News