கோவை: சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியாததால் கோவையில் குழந்தைகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
வானியல் அரிய நிகழ்வான சந்திர கிரகணம் நேற்று இரவு நிகழ்ந்தது. இதனால் நாடு முழுவதும் நேற்று மாலையே கோவில் நடைகள் மூடப்பட்டன.
கோவையில் மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி, கொடிசியா அறிவியல் மையம் உள்ளிட்ட பகுதிகளில் சந்திரகிரகணதைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பகுதிகளில் பெற்றோர்களுடன் குழந்தைகள் ஆர்வத்துடன் திரண்டனர்.
பொதுமக்களும் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் கிரகணத்தைக் காண ஆர்வத்துடன் திரண்டனர். ஆனால், மேகக்கூட்டங்களால் கோவையில் சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை.
இதனால், குழந்தைகளும், அவர்களுடன் குழந்தைகளாகவே மாறி நின்றிருந்த பெற்றோர்களும் ஏமாற்றமடைந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் சிவப்பு நிலாவைப் பார்க்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோவை மட்டுமல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களிலும் சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை என்று பொதுமக்கள் ஏமாற்றம் தெரிவித்தனர். இதனிடையே ஏமாற்றமடைந்தவர்கள் பலரும் இது குறித்த மீம்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஏமாற்றம்! #Coimbatore #LunarEclipse pic.twitter.com/UCB5k5dMCt
— News Clouds Coimbatore (@newscloudscbe) September 8, 2025
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈