கோயம்புத்தூர் சங்கமம்… மக்களே கொண்டாட வாங்க… அழைக்கிறார் மாவட்ட ஆட்சியர்…!

கோவை: கோவையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2 தினங்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

கோவையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வ.உசி மைதானத்தில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் 400 கலைஞர்களின் கலை நிகழ்சியோடு மாபெரும் கோயம்புத்தூர் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவினை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கவுள்ளார்.

Advertisement

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் எட்டு நகரங்களில் சங்கமம் நம்ம ஊருதிருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா வ.உ.சி மைதானத்தில் வருகின்ற நவம்பர் 1 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து விழா பேரூரையாற்ற உள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

Advertisement

கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் கடலூர் சுதாகர், சரஸ்வதி குழுவினரின் தொடங்கும் இவ்விழாவில் திரைப்பட புகழ் பாடகர்கள் ஜான் சுந்தர், நவக்கரை நவீன் பிரபஞ்சன் ஆகியோரின் பாடல்கள் மற்றும் இசைக்குழுவினரோடு திருப்பூர் முருகன், ஈரோடு தேவி, திருப்பூர் மின்னல். கோவை முருகன், தூத்துக்குடி குமார ராமன் மற்றும் ஈரோடு இசைப்பள்ளி மாணவிகள் என 75 கலைஞர்கள் இணைந்து நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம், ஜிக்காட்டம், தேவராட்டம், பம்பையாட்டம் ஆகிய கலைகளுடன் வழங்கும் தமிழ் அமுது நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து விழுப்புரம் ஜனார்த்தனம் கலைக்குழுவின் மல்லர் கம்பம், கிருஷ்ணகிரி கிராமிய இசைத்தென்றல் குழுவின் இறை நடனம், கோவை கௌமார மடாலயம் கொங்கு பண்பாட்டுக் குழுவினரின் சலங்கையாட்டம், திருப்பூர் கலைமகள் கலைக்குழுவினரின் உடுக்கை பாடல், கோவை சிங்கை கலைக்குழுவினரின் வள்ளிக்கும்மி, சிவகங்கை வைகைப்பிரபா குழுவினரின் கிராமிய பாடல்கள், கிருஷ்ணகிரி மகிழம் குழுவினரின் கைச்சிலம்பாட்டம், திருவண்ணாமலை மகாலட்சுமி நாடக சபா வழங்கும் தெருக்கூத்து ஆகியவை நடைபெறும்.

நவம்பர் 2 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கும் விழாவில் கோவை அலமேலு மங்கம்மாள் குழுவினரின் காவடியாட்டம், மதுரை சமர் குழுவினரின் பறையாட்டம், நீலகிரி மலையரசி குழுவினரின் தோடர் நடனம், கோயம்புத்தூர் கிரியாஞ்சலி அகாடமி பைன் ஆர்ட்ஸ் குழுவினரின் பரதநாட்டியம் மதுரை ஸ்ரீ கலைத்தாய் கிராமிய கலைக்குழுவினரின் கரகாட்டம், விருதுநகர் பாண்டிராணி குழுவினரின் வில்லுப்பாட்டு, தூத்துக்குடி கார்த்திகேயன் குழுவினரின் கணியான் கூத்து, திருவள்ளூர் சகா குழுவினரின் சிலம்பாட்டம்.

பட்டுக்கோட்டை சைமன் பேண்டு இனைசக்குழுவினரின் பேண்டு இசை, கோயம்புத்தூர் சிகரம் குழுவினர் ஒயிலாட்டம், திருப்பூர் சிந்து குழுவினர் துடும்பாட்டம். புதுக்கோட்டை கண்ணன் குழுவினர் கிராமிய பாட்டு, திருவாரூர் சங்கரதாஸ் குழுவினர் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கலைகளை 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெற்று பிரமாண்டமாக ஒரே மேடையில் நிகழ்த்தப்பட உள்ளது. இவ்விழாவினை திரளான பொதுமக்கள் கலந்துக் கொண்டு கண்டு களித்து நம் மண்ணின் கலைகளை ஆதரித்து, கலைஞர்களுக்கு உற்சாகம் அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Recent News

கோவையில் திறக்கப்பட்டது இணையத் தொழிலாளர்கள் கூடம்…

கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையிலும் இணைய தொழிலாளர்கள் கூடம் திறக்கப்பட்டது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள இணையத் தொழிலாளர்கள் கூடத்தை எம்பி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சி பகுதியில்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp